Home வணிகம்/தொழில் நுட்பம் 1 டிரில்லியன் சாதனையிலிருந்து சரிந்த ஆப்பிள்

1 டிரில்லியன் சாதனையிலிருந்து சரிந்த ஆப்பிள்

882
0
SHARE
Ad

நியூயார்க் – கடந்த 2018-ஆம் ஆண்டில் பங்குச் சந்தை மதிப்பில் 1 டிரில்லியன் டாலர் (1000 பில்லியன் டாலர்) என்ற உச்சத்தை அடைந்த ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு விலைகள்  கடந்த இரண்டு நாட்களாக கடும் சரிவைச் சந்தித்துள்ளன.

இதன் மூலம் அதன் சந்தை மதிப்பு 1 டிரில்லியனிலிருந்து சுமார் 700 பில்லியனாகக் குறைந்தது.

புதன்கிழமை விடுத்த அறிவிப்பில் ஆப்பிள் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக், சீனாவில் ஆப்பிள் கருவிகளின் விற்பனை சரியும் என்று எதிர்பார்ப்பதாகவும் இதன் காரணமாக ஆப்பிளின் வருமானம் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியாமல் பாதிப்படையும் என்றும் கூறினார்.

#TamilSchoolmychoice

அவரது இந்த அறிவிப்பின் காரணமாகவே ஆப்பிள் பங்கு விலைகள் சரிந்தன.

ஆப்பிள் விலைகளின் சரிவால் நேற்று வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் பங்குச் சந்தை 2.8 விழுக்காடு சரிந்தது.

டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து மேற்கொண்டு வரும் சீனாவுடனான வணிகப் போரின் காரணமாகவே ஆப்பிள் கருவிகளின் விற்பனை சீனாவில் குறையும் என்ற கணிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.