Home உலகம் பாபுக் புயல் தென் தாய்லாந்தைத் தாக்கியது

பாபுக் புயல் தென் தாய்லாந்தைத் தாக்கியது

1648
0
SHARE
Ad

பேங்காக் – கடந்த 30 ஆண்டுகளில் எந்தவித புயல் பாதிப்பையும் எதிர்நோக்காத தென் தாய்லாந்து பகுதி நேற்று பாபுக் புயலின் தாக்கத்தினால் கடுமையான சேதங்களை எதிர்கொண்டது.

தென் தாய்லாந்து கடற்கரைகளைத் தாக்கிய பாபுக் புயல் அதன் பாதையில் மரங்களை வீழ்த்தியதோடு, வீட்டுக் கூரைகளையும் பிய்த்தெடுத்து வீசியெறிந்தது.

இதன் காரணமாக திடீர் வெள்ளம் ஆங்காங்கே ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டிருந்தாலும், அந்தப் புயலின் வீரியம் தற்போது குறைந்து விட்டதாக வானிலை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

புயல் சேதங்களைத் தொடர்ந்து இதுவரையில் ஒருவர் மரணமடைந்தார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சிலர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

உல்லாசக் கடற்கரைகளுக்குப் புகழ்பெற்ற தென் தாய்லாந்தில் ஏராளமான சுற்றுப் பயணிகள் பாதிப்படைந்துள்ளனர் என்றும் தங்களின் உல்லாசத் தளங்களை விட்டு அவர் திரும்ப சிரமத்தை எதிர்நோக்குகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.