Home வணிகம்/தொழில் நுட்பம் ஒரு மீன் – 278 கிலோ எடை – விலையோ 12.78 மில்லியன் ரிங்கிட்!

ஒரு மீன் – 278 கிலோ எடை – விலையோ 12.78 மில்லியன் ரிங்கிட்!

1289
0
SHARE
Ad

தோக்கியோ – ஜப்பானில் மீன் என்பது அந்நாட்டு மக்களின் முதன்மையாக உணவாகும். தோக்கியோவில் உள்ள மீன் சந்தையில் ஆண்டுதோறும் புத்தாண்டு தொடக்கத்தின் போது சிறப்பான மீன்களை ஏலத்திற்கு விடுவது என்பது அங்கே உள்ள வழக்கம்.

தோக்கியோவின் புகழ்பெற்ற பழைய மீன் சந்தையான ட்சுக்கிஜி என்ற மீன் சந்தை அப்புறப்படுத்தப்பட்டு, அதற்குப் பதிலாக கடந்த ஆண்டின் இறுதியில் புதிய மீன்சந்தைக்கான ஓரிடம் தோக்கியோவில் உருவாக்கப்பட்டது.

அங்கு நடைபெற்ற மீன்களுக்கான ஏலத்தில் 278 கிலோ எடை கொண்ட மிகப் பெரிய துனா (Tuna – தமிழில் சூரை மீன்) வகை மீன் ஒன்று ஏலத்திற்கு விடப்பட்டதில் அதனை 3.1 அமெரிக்க டாலர் (மலேசிய ரிங்கிட் மதிப்பில் 12.78 மில்லியன் ரிங்கிட்) விலை கொடுத்து ஏலத்தில் எடுத்திருக்கிறார் சுஷி எனப்படும் ஜப்பானிய வகை உணவுகளுக்கான வணிகரான கியோஷி கிமுரா என்பவர்.

#TamilSchoolmychoice

ஜப்பானிய மீன் சந்தை வரலாற்றில் இது ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது.

ஜப்பானின் வடக்கு கடலோரப் பகுதியில் பிடிக்கப்பட்ட இந்த மீன் அழிந்து வரும் அரியவகை மீன்களாகக் கருதப்படுகிறது.

இதற்கு முன் அதிக விலை கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட மீன் 5.89 மில்லியன் ரிங்கிட் விலையில் 2013-இல் வாங்கப்பட்டதாகும். அப்போது இதை வாங்கியதும் இதே வணிகரான கியோஷி கிமுராதான்.

அதை விட இரண்டு மடங்கு விலை கொடுத்து தற்போது அத்தகைய மீனை வாங்கியிருக்கிறார் இந்த ஜப்பானிய வணிகர்.