Home நாடு புதிய மாமன்னருடன் சில விவகாரங்கள் ஆலோசிக்க வேண்டியுள்ளது!- மகாதீர்

புதிய மாமன்னருடன் சில விவகாரங்கள் ஆலோசிக்க வேண்டியுள்ளது!- மகாதீர்

872
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டின் புதிய மாமன்னர் கூடிய விரைவில் நியமிக்கப்படுவார் என தாம் நம்புவதாக பிரதமர் மகாதீர் முகமட் கூறினார். சுல்தான் முகமட்டின் முடிவினை அரசாங்கம் மதிப்பதாகவும், ஏற்றுக் கொள்வதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

குறிப்பிட்ட ஒரு சில விவகாரங்களை மாமன்னருடன் கலந்து ஆலோசிக்க வேண்டி இருப்பதால் கூடிய விரைவில் புதிய மாமன்னர் நியமனம் குறித்து அறிவிக்கப்படும் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மாமன்னரை தேர்வுச் செய்யும் விவகாரத்தில் அரசாங்கம் தலையிடாது எனவும், மலாய் ஆட்சியாளர்களின் மாநாட்டில் அம்முடிவு செய்யப்படும் எனவும் மகாதீர் கூறினார்.

#TamilSchoolmychoice

நாட்டின் 15-வது மாமன்னராகக் கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி, சுல்தான் முகமட், மலேசிய ஆட்சியாளர்களின் மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக் காலம் வருகிற 2021-ல் முடிவடையும் வேளையில், நேற்று அப்பதவியிலிருந்து விலகுவதாக அறிக்கை ஒன்றின் வாயிலாக இஸ்தானா நெகாரா தெரிவித்தது.

புதிய மாமன்னரை தேர்ந்தெடுக்கும் வரையில், தற்போதைய துணை மாமன்னரான சுல்தான் நஸ்ரின் ஷா, அந்தப் பதவியினை வகிப்பார் என இன்று நடைபெற்ற மலாய் ஆட்சியாளர்களின் மாநாடு முடிவு செய்துள்ள வேளையில், பிரதமர் இக்கூற்றினை வெளியிட்டுள்ளார்.