Home நாடு சட்டவிரோதமாக எழுப்பப்பட்ட கோயிலை இடிக்க உத்தரவு!

சட்டவிரோதமாக எழுப்பப்பட்ட கோயிலை இடிக்க உத்தரவு!

1102
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: வீட்டு வாசல் அமைப்பில் சட்டவிரோதமாகக் கோயில் ஒன்றை எழுப்பி பொது மக்களுக்கு இடையூறை ஏற்படுத்திய உரிமையாளருக்கு, அக்கோயிலை அகற்ற எச்சரிக்கை கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதாக இஸ்காண்டார் புத்ரி நகரக் கழகம் தெரிவித்தது.

இந்த கோயில் கட்டுமானம் குறித்து பொதுமக்களிடமிருந்து வாட்ஸ்சாப் வாயிலாகப் புகார் பெறப்பட்டது என அப்பகுதியின் மாநகராட்சித் தலைவர் டத்தோ அடிப் அசாரி டாவுட் கூறினார்.

#TamilSchoolmychoice

டிசம்பர் 23-ஆம் தேதி இது குறித்த புகாரைப் பெற்றோம். மறுநாள், அக்கோயில் கட்டப்பட்ட நிலத்தின் உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, கட்டிட நிர்மாண ஆணையரிடம் (COB) இருந்து உத்தரவு கிடைத்தது. நாங்கள் அந்த பகுதிக்கு வருகை தந்து, 1974-ஆம் ஆண்டு தெரு, வடிகால் மற்றும் கட்டிடச் சட்டம் கீழ் அக்கோயிலை இடிப்பதற்கு எச்சரிக்கை கடிதத்தை அந்நில உரிமையாளரிடம் வழங்கினோம்.” என அவர் அறிக்கை வாயிலாகக் கூறினார்.

கோவிலின் கட்டுமானத் தளம் அதே நாளில் நிறுத்தப்பட்டது என்று அவர் கூறினார்.

எனினும், ஒரு சில நாட்களுக்குப் பின்னர், மீண்டும் கோயில் கட்டுமானப் பணிகள் தொடர்வது போல் இருந்ததால், இரண்டாவது குற்றத்திற்காக எச்சரிக்கை கடிதம் வழங்கப்பட்டது என அடிப் கூறினார்.

அதனை அடுத்து, கோயில் உரிமையாளர், ஜனவரி 13-ம்தேதிக்குள் கோயிலை இடிப்பதற்கு ஒப்புக் கொண்டதாகத் தெரிவித்தார்.