Home நாடு சுல்தான் முகமட்டை அவமதித்தவரின் பணி நீக்கம் முறையாக அறிவிக்கப்பட வேண்டும்!

சுல்தான் முகமட்டை அவமதித்தவரின் பணி நீக்கம் முறையாக அறிவிக்கப்பட வேண்டும்!

717
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் மாமன்னர் சுல்தான் முகமட்டை முகநூலில் அவமதித்த நபரை பணியிலிருந்து நீக்கி விட்டதாகக் கூறும் சிஸ்கோ நிறுவனம், அந்நபரின் பணி நீக்கம் குறித்து அதிகாரப்பூர்வமாக கடிதம் ஒன்றினை வெளியிட வேண்டும் என அம்னோ இளைஞர் பிரிவுக் கேட்டுக் கொண்டது. அவ்வாறு செய்வதற்கு அந்நிறுவனத்திற்கு, 24 மணி நேரம் கால அவகாசம் தரப்படுவதாக, சிலாங்கூர் மாநில துணைத் தலைவர், அமின் முகமட் ஷுகோர் கூறினார்.

மேலும், கூறிய அமின், அந்நிறுவனம் அந்நபரை பணியிலிருந்து நீக்கி விட்டதாக முகநூலில் பதிவிட்டிருப்பது சந்தேகத்திற்கு உரியதாக இருப்பதாகாவும், அது பொதுவான பதிவாக இருப்பதால், அதிகாரப்பூர்வமான அறிக்கையை வெளியிட வேண்டும் எனவும் சொன்னார்.

சிஸ்கோ நிறுவனத்தின் அணுகுமுறையை பாராட்டிய அமின், முறையான ஓர் அறிக்கை வெளியிடப்பட்டால் மேலும் ஆறுதலாக இருக்கும் என நினைவூட்டினார்.

#TamilSchoolmychoice

மலாய் ஆட்சியாளர்களை அவமானப்படுத்தியது மன்னிக்க முடியாத செயல் என்றும், இதன் பின்னணியில் இன எதிர்ப்புக் காரணமல்ல என்றும் விளக்கமளித்தார்.