பெய்ஜிங்: அமெரிக்காவின் போர்க்கப்பல் தென் சீனக் கடலில் செயல்பட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டி, சீனா தனது, நீண்ட தூரம் கடந்து சென்று தாக்கும் ஏவுகணைக் கப்பலை தயார்படுத்தி வருகிறது.
டிஎப்-26 (DF-26) என அழைக்கப்படும், அந்த ஏவுகணை, சீனாவின் வடமேற்குபீடபூமிமற்றும்பாலைவனப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக தி குளோபல் டைம்ஸ் செய்தித் தளம் தெரிவித்தது.
திங்கட்கிழமை தென் சீனக் கடல் பகுதியில் சர்ச்சைக்குரிய தீவுகளுக்கு அருகே அமெரிக்கப் போர்க்கப்பல் செயல்பட்டு வருவதாகச் செய்தி பெறப்பட்டதும் சீனா இம்முடிவிற்கு வந்தது.
இந்த ஏவுகணைகள் வழக்கமான ஆயுதங்களையும் மற்றும் அணுவாயுதங்களையும் ஏந்தி செல்லக் கூடியவையாகும். சுமார் 4,500 கிமீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் திறனை இவை கொண்டுள்ளதாக நம்பப்படுகிறது.
மேற்கு பசிபிக்கில் உள்ள அமெரிக்காவின் கடற்படை தளமான குவாமை தாக்கும் திறனும் இதற்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இறையாண்மையைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை சீனா மேற்கொள்ளும் என சீன அரசு அமெரிக்காவை எச்சரித்துள்ளது.