Home நாடு கேமரன் மலை: வேட்பு மனு தாக்கல் முடிவுற்றது, கேவியல் போட்டியிலிருந்து விலகல்!

கேமரன் மலை: வேட்பு மனு தாக்கல் முடிவுற்றது, கேவியல் போட்டியிலிருந்து விலகல்!

836
0
SHARE
Ad

கேமரன் மலை: வருகிற ஜனவரி 26-ஆம் தேதி, கேமரன் மலை இடைத் தேர்தல் நடைபெற இருக்கும் வேளையில், இன்று (சனிக்கிழமை), சுல்தான் அகமட் ஷா இடைநிலைப் பள்ளியில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தை பிரதிநிதித்து போட்டியிடும், பகாங் மாநில ஐசெக கட்சித் தலைவர் எம். மனோகரன், தேசிய முன்னணி வேட்பாளர் ரம்லி முகமட் நூர், மற்றும், தன்னிட்சையாக போட்டியிட இருக்கும் சளேயுட்டின் அப்துல் தாலிப் மற்றும் வோங் செங் யீ ஆகியோர் தங்களது வேட்பு மனுத் தாக்கலை ஒப்படைத்தனர்.

இதற்கு முன்னதாக, தாமும் தேர்தல் களத்தில் இறங்க உள்ளதாகக் கூறிய மைபிபிபி கட்சித் தலைவர், போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாகத் தெரிவித்து, நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டப் போவதாக அறிவித்தார்.

#TamilSchoolmychoice

14- வது பொதுத் தேர்தலில், தேசிய முன்னணிக் கட்சியின் வேட்பாளர் சி. சிவராஜ், 1954 தேர்தல் சட்டத்தை மீறியுள்ளார் என, கடந்த ஆண்டு, ஜூன் 4-ஆம் தேதி மனோகரன் தேர்தல் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்அதனைத் தொடர்ந்து தேர்தல் நீதிமன்றம், கேமரன் மலையில் சிவராஜின் வெற்றியை இரத்து செய்து, அத்தொகுதியில் மீண்டும் தேர்தல் நடத்தப்படவேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

கேமரன் மலை இடைத்தேர்தல் வருகிற ஜனவரி 26-ம் தேதி நடத்தப்படும் என மலேசியத் தேர்தல் ஆணையம் அறிவித்திக்கும் வேளையில், இம்முறை முதல் முறையாக, கேமரன் மலை இடைத் தேர்தலின் வாக்களிப்பு நேரடியாக மலேசியத் தேர்தல் ஆணையத்தின் சமூக ஊடகப் பக்கத்தில் ஒளிபரப்பப்படும் என தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் ஹருண் தெரிவித்திருந்தார்.

வாக்களிக்கும் செயல்முறை மற்றும் வாக்கு கணக்கெடுப்பு முறைகளை மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிப்பதோடு, பொதுமக்களிடத்தில் தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவதற்காக இம்முறை இந்தச் செயல்முறை அறிமுகப்படுத்தப்படுகிறது என அவர் கூறினார்.