கோலாலம்பூர்: பகாங் அரசுத் தரப்பினரின் சந்திப்பு நேற்று மாலை 4 மணியிலிருந்து இரவு 7:30 மணி வரையிலும் நடத்தப்பட்டது.
தெங்கு அப்துல்லாவை, மாநிலத்தின் புதிய சுல்தானாக பிரகடனப்படுத்துவதற்காக இச்சந்திப்புக் கூட்டம் நடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
தற்போதைய, பகாங் மாநில ஆட்சியாளரான சுல்தான் அகமத் ஷா, உடல் நலம் குன்றி இருப்பதால், அவரது மகனான, தெங்கு அப்துல்லாவுக்கு, மாநில சுல்தானாக மகுடம் சூட்டப்படும் எனக் கூறப்படுகிறது.
மலாய் ஆட்சியாளர்கள் சுழற்சி முறையின் படி, பகாங் சுல்தான் இம்முறை மாமன்னர் பதவியை வகிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.
நேற்றையச் சந்திப்பில், பகாங் மாநில அரசுத் தரப்பினர், மாநில மந்திரி பெசார் வான் ரொஸ்டி வான் இஸ்மாயில் மற்றும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில், இன்று (சனிக்கிழமை) பெக்கானில் அமைந்துள்ள, இஸ்தானா அபு பக்காரிலிருந்து, 3 மணிஅளவில் அரசு அறிவிப்பு செய்யப்படும் என நம்பப்படுகிறது.