Home நாடு சாகிர் நாயக் மதப் பிரச்சாரம் செய்வதற்கு தடையில்லை!

சாகிர் நாயக் மதப் பிரச்சாரம் செய்வதற்கு தடையில்லை!

972
0
SHARE
Ad

புத்ராஜெயா: மத பதட்டங்களை ஏற்படுத்தும் மற்றும் தேசியப் பாதுகாப்பை பாதிக்கும் மதப் பிரச்சாரங்களைத் தொடுக்காத வரைக்கும், எந்த சமய மத போதகர்களையும் தங்களது பிரச்சாரத்தை செயல்படுத்துவதிலிருந்து அரசாங்கம் தடுக்காது என பிரதமர் துறை அமைச்சர், டத்தோஶ்ரீ முஜாஹிட் யுசோப் ராவா கூறினார்.

மத பிரச்சாரங்களை ஏற்பாடு செய்ய விரும்புபவர்கள் மாநிலத்தில் உள்ள மத அமைப்புகளுக்கு தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறான நிகழ்ச்சிகளில் இதர மதம், இனம், மற்றும் நாட்டின் அமைதிக்கு கேடு விளைவிக்கும்படியாக நடக்காமலிருப்பதற்காக இம்முறை செயல்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

சர்ச்சைக்குரிய மத போதகர் டாக்டர் சாகிர் நாயக் இந்நாட்டில் தமது உரைகளை வழங்குவதில் எவ்வித தடையுமில்லை, ஆயினும், அவரது பிரச்சாரங்கள் எந்தவொரு பிரச்சனையையும், ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் எனவும்  அமைச்சர் கூறினார்.