Home நாடு நாட்டின் நலனுக்காக இரு தரப்பும் இணைந்து செயல்படுவோம்!- துங்கு இஸ்மாயில்

நாட்டின் நலனுக்காக இரு தரப்பும் இணைந்து செயல்படுவோம்!- துங்கு இஸ்மாயில்

802
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) பிரதமர் மகாதீர் முகமட், சுல்தான் இப்ராகிமை மரியாதை நிமித்தமாக, ஜோகூர் அரண்மனையில் சந்தித்ததற்கு, துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் நன்றி தெரிவித்துக் கொண்டார். தனது, டுவிட்டர் பக்கத்தில் அந்நன்றியினை தெரிவித்துக் கொண்ட துங்கு, நாட்டின் முன்னேற்றத்திற்காக இரு தரப்பும் இணைந்து செயல்படுவது அவசியமாகிறது எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், சுல்தான் இப்ராகிம், பிரதமரை செனாய் விமான நிலையத்திற்கு புரோட்டோன் காரில் அழைத்துச் சென்றப் படத்தினையும் அப்பதிவில் துங்கு இணைத்திருந்தார்.

#TamilSchoolmychoice

புரோட்டோன் 1” என்ற எண்ணைக் கொண்டிருக்கும், புரோட்டான் சாகா ரக வாகனம்சுல்தான் இஸ்கண்டாருக்கு, 1985-ஆம் ஆண்டில் மகாதீர் முதலாவதாக பிரதமர் பதவியை வகித்தபோது பரிசளித்ததாகும்.