Home உலகம் சிங்கப்பூர்: கடற்பகுதியில் அனுமதியின்றி நுழைந்ததால் மலேசியா-சிங்கப்பூர் சந்திப்புக் கூட்டம் ஒத்திவைப்பு!

சிங்கப்பூர்: கடற்பகுதியில் அனுமதியின்றி நுழைந்ததால் மலேசியா-சிங்கப்பூர் சந்திப்புக் கூட்டம் ஒத்திவைப்பு!

909
0
SHARE
Ad

சிங்கப்பூர்:  திங்கட்கிழமை (ஜனவரி 14) நடைபெற இருந்த, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிற்கு இடையிலான, இஸ்கண்டார் மலேசியாவின், 14-வது சந்திப்புக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றின் வாயிலாக அறிவித்துள்ளது. இந்த ஒத்திவைப்பிற்கு மலேசியாவும் ஒப்புக் கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி, துவாஸ் கடற்பகுதியில் ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒஸ்மான் சாபியான் அனுமதியின்றி நுழைய முற்பட்டதாகக் கூறி, இந்த சந்திப்புக் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

எனினும், அடுத்த சந்திப்புக் கூட்டம் எப்போது நடைபெறும் என்பதை அமைச்சகம் அறிவிக்கவில்லை.