Home 13வது பொதுத் தேர்தல் “கூட்டரசுப் பிரதேசத்தில் நாடாளுமன்ற வேட்பாளராக சந்திரகுமணனுக்கு வாய்ப்பு”- கேவியஸ்

“கூட்டரசுப் பிரதேசத்தில் நாடாளுமன்ற வேட்பாளராக சந்திரகுமணனுக்கு வாய்ப்பு”- கேவியஸ்

574
0
SHARE
Ad

Chandrakumanan-Sliderகோலாலம்பூர், எப்ரல் 2- எதிர்வரும் 13வது பொதுத் தேர்தலில் கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேச மாநிலத்தில், ஒரு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பைப் பிபிபி கட்சி  பெறும் என்று அக்கட்சியின் தேசியத்தலைவர் கேவியஸ் தெரிவித்தார்.

வங்சாமாஜூவில் நேற்று பிபிபி கட்சியின் தேர்தல் நடவடிக்கை அறையைத் திறந்து வைத்த அவர், வரும் பொதுத்தேர்தலில், தேசியமுன்னணி கூட்டரசுப் பிரதேசத்தில் மகத்தான வெற்றிபெற பிபிபி பொறுப்பாளர்கள் கடுமையாக உழைத்து வருவதாகக் கூறினார்.

மேலும், பிபிபி கட்சி வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட விலாயா மாநிலத்தில் ஒரு தொகுதியை ஒதுக்கும்படி,  தேசிய முன்னணித் தலைவர்களைக் தாம் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் கேவியஸ் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

சந்திரகுமணனே சிறந்த வேட்பாளர்

அப்படி ஏதாவது ஒரு தொகுதி கோலாலம்பூரில் வழங்கப்பட்டால், தேசிய முன்னணி வேட்பாளராக நிறுத்தப்பட பிபிபி கூட்டரசுப் பிரதேச மாநிலத்தலைவர்  டத்தோ சந்திரகுமணனே மிகச்சிறந்த வேட்பாளர் என்று கேவியஸ் தெரிவித்தார்.

கூட்டரசுப் பிரதேச மாநிலத்தில் உள்ள 12 நாடாளுமன்றத் தொகுதிகளில் 2 தொகுதிகள் மட்டுமே தேசியமுன்னணி வசம் உள்ளன. மீதமுள்ள 10 தொகுதிகள் எதிர்கட்சிகள் வசம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.