Home நாடு பத்துகவான் இடுகாட்டுப் பிரச்சினை- பராமரிப்பு கடிதம் ஆலய நிர்வாகத்திடம் இராமசாமி ஒப்படைப்பு

பத்துகவான் இடுகாட்டுப் பிரச்சினை- பராமரிப்பு கடிதம் ஆலய நிர்வாகத்திடம் இராமசாமி ஒப்படைப்பு

509
0
SHARE
Ad

Ramasamy---Sliderபத்துகவான், ஏப்ரல் 2 – பினாங்கு,  பத்து கவானிலுள்ள விளையாட்டு அரங்கத்திற்கு அருகில் உள்ள இடுகாட்டுப் பிரச்சினை கடந்த சில ஆண்டுகளாகவே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த இடுகாட்டைப் பராமரிக்கும் பொறுப்புக்கான உறுதிக்கடிதத்தைத் துணை முதலமைச்சர் டாக்டர் இராமசாமி நேற்று ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.

கடந்த 80 அல்லது 100 ஆண்டுகளாக இந்த இடுகாட்டை இங்குள்ள முத்துமாரியம்மன் ஆலயம் பராமரித்துவந்தாலும், இந்த இடுகாடு ஆலயத்தின் பெயரிலோ, வேறு எந்த அமைப்பின் பெயரிலோ பதிவாகவில்லை என்று இராமசாமி தெரிவித்தார்.

இதனால் இடுகாடு அமைந்துள்ள 5 ஏக்கர் உட்பட 150 ஏக்கரையும் விளையாட்டு அரங்கத்தின் பெயரில் அரசிதழில் பதிவுசெய்ய மாநில அரசு மூலம் ஏற்பாடு நடந்தபோது, தாம் இடுகாட்டுக்குரிய 5 ஏக்கர் பதிவாகாமல் தடுத்து நிறுத்தியதாக துணையமைச்சர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

தற்போது 1.9 ஏக்கர் நிலத்தில் மட்டுமே பிரேதங்கள் அடக்கம் செய்யப்படுகின்றன என்றும், உறுதிமொழிக் கடிதமும் அந்த 1.9 ஏக்கருக்கு மட்டுமே இன்று வழங்கப்படுகிறது என்றும், இதன் உரிமம் இந்து அறப்பணி வாரியத்திற்கு முறையாகக் கிடைத்தவுடன், இந்த 1.9 ஏக்கருக்கு அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் மூலம், பராமரிக்கும் உரிமை ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் மீதமுள்ள 3.1 ஏக்கர் நிலத்தில் மின்சுடலை அமைக்கும் திட்டத்தை இந்து அறப்பணி வாரியம் கொண்டுள்ளதாகவும்  இராமசாமி தெரிவித்தார்.

முன்னதாக ஆலயத்திற்கு 15 ஆயிரம் வெள்ளி மானியம் வழங்கிய துணை முதல்வர் இராமசாமிக்கு ஆலயத் தலைவர் சிவபெருமாள் நன்றி தெரிவித்துக்கொண்டார்.