Home உலகம் அமெரிக்க அதிபர் தேர்தலில் குதிக்கிறார் முதல் இந்து வேட்பாளர் துளசி கபார்ட்

அமெரிக்க அதிபர் தேர்தலில் குதிக்கிறார் முதல் இந்து வேட்பாளர் துளசி கபார்ட்

1795
0
SHARE
Ad

வாஷிங்டன்: கடந்த 2016-ஆம் ஆண்டில் நடைபெற்ற அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் வெற்றி பெற்றார் டொனால்ட் டிரம்ப். அடுத்த அதிபருக்கான தேர்தல் அடுத்தாண்டு 2020-இல்தான் நடைபெறும் என்றாலும், அதற்கான கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்வு இப்போதே, இந்த வருடமே தொடங்கி விடும்.

அந்த வகையில் ஜனநாயகக் கட்சிக்கான வேட்பாளர் யார் என்ற போட்டி இப்போதே தொடங்கியுள்ளது. இந்தப் போட்டியில் குதிக்கப் போவதாக அறிவித்துள்ளார் துளசி கபார்ட் என்ற இந்தியப் பெண்மணி. 37 வயதான இவர் அமெரிக்க நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்து நாடாளுமன்ற உறுப்பினராவார்.

அவ்வாறு அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவின் மிக இளவயது அதிபர், முதல் பெண் அதிபர், முதல் இந்து அதிபர் என்ற மூன்று பெருமைகளை துளசி பெறுவார்.

#TamilSchoolmychoice

இந்த முறை ஜனநாயகக் கட்சியின் வேட்பாளருக்கான தேர்வு கடுமையான போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் பல்வேறு சர்ச்சைகளிலும், மக்கள் எதிர்ப்பிலும் சிக்கிக் கொண்டிருக்கும் டிரம்ப் அடுத்த அதிபர் தேர்தலில் எளிதாகத் தோற்கடிக்கப்படுவார் எனக் கருதப்படுகிறது.

அதனை நிறைவேற்ற ஒரு சிறந்த, ஆற்றல் வாய்ந்த வேட்பாளர் ஜனநாயகக் கட்சிக்குத் தேவைப்படுகிறது.

ஏற்கனவே, ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், 2016 அதிபர் தேர்தலில் போட்டியிட்ட பெர்னி சாண்டர்ஸ் ஆகியோர் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.