Home நாடு அம்பர் தெனாங் விநாயகர் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது – வேதமூர்த்திக்கு நன்றி

அம்பர் தெனாங் விநாயகர் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது – வேதமூர்த்திக்கு நன்றி

2045
0
SHARE
Ad

டிங்கில் – டிங்கில் வட்டாரத்தில் 120 ஆண்டுகள் வரலாற்றுப் பெருமை கொண்ட அருள்மிகு பஞ்சமுக விநாயகர் ஆலயம், ஆகம முறைப்படி இடம் மாற்றப்பட்டது. இதன் தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (13 ஜனவரி 2019) நடைபெற்ற பூமி பூசையில் முன்னாள் அம்பர் தெனாங்க் தோட்டப் பாட்டாளிகள் புடைசூழ, பிரதமர் இலாகாவின் ஒற்றுமை அமைச்சர் பொன்.வேதமூர்த்தியும் கலந்து கொண்டார் என்று ஆலயப் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.

டிங்கில் வட்டாரத்தில் அமைந்திருந்த இந்தப் பழைய ஆலயம், அங்கு சைம் டார்பி நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட நகரிய மேம்பாட்டுத் திட்டத்தால் இடம்பெயர வேண்டியிருந்தது. ஆனாலும், இந்த நிறுவனத்துடன் ஆலய விவகாரத்தில் தொடக்கத்தில் சிக்கல் எழுந்தது. அப்பொழுதெல்லாம் அமைச்சர் வேதமூர்த்தி எங்கள் பக்கம் நின்றதுடன் எல்லாம் சுமுகமாக நடைபெறவும் உதவி புரிந்தார். அத்துடன் கடந்த மூன்று ஆண்டுகளாக  சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அம்பர் தெனாங் முன்னாள் தோட்ட மக்களின் ஆன்மிகப் பயணம் செவ்வனே தொடர உதவி புரிந்த பிரதமர் துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி அவர்களுக்கு சுற்று வட்டார இந்து மக்களின் சார்பாக நன்றி தெரிவிப்பதாக ஆலய நிர்வாகக் குழுவினர் தெரிவித்தனர்.

டிங்கில் சுற்று வட்டார இந்து மக்களின் வழிபாட்டு தலம் தொடர்பாக கடைசியில் ஒரு சுமுகமான நிலை ஏற்பட உதவி புரிந்த சைம் டார்பி நிறுவனத்திற்கும் நன்றி தெரிவிப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.