Home நாடு அப்துல் அசிசும் அவரது சகோதரரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்!

அப்துல் அசிசும் அவரது சகோதரரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்!

821
0
SHARE
Ad
Datuk-Abdul-Azeez-Abdul-Rahim
அப்துல் அசிஸ் அப்துல் ரகிம் – பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர்

புத்ரா ஜெயா – அம்னோ உச்சமன்ற உறுப்பினரும், பாலிங் நாடாளுமன்ற உறுப்பினரும், தபோங் ஹாஜி அமைப்பின் முன்னாள் தலைவருமான டத்தோஸ்ரீ அப்துல் அசிஸ் ரஹிம் மற்றும் அவரது சகோதரர் டத்தோ அப்துல் லத்தீப் அப்துல் ரஹிம் இருவரும் இன்று ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டனர்.

நாளை புதன்கிழமை (ஜனவரி 16) அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்.

ஊழல், கள்ளப்பண பரிமாற்றம், ஆகிய குற்றங்களுக்காக அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தும் முடிவை அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் எடுத்திருப்பதாக ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் அவர்கள் இருவரும் புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணைய தலைமையகத்தில் கைது செய்யப்பட்டனர்.