Home கலை உலகம் “கடாரம் கொண்டான்” – கோலாலம்பூர் தெருக்களில் படப்பிடிப்பு

“கடாரம் கொண்டான்” – கோலாலம்பூர் தெருக்களில் படப்பிடிப்பு

1242
0
SHARE
Ad

சென்னை – ஒரு நடிகரை வைத்து இன்னொரு நடிகர் படம் தயாரிப்பது என்பது மிகவும் அபூர்வம். அந்த வகையில் வித்தியாசமானவர் நடிகர் கமல்ஹாசன். அந்தக் காலத்தில் நடிகர் சத்யராஜ் வளர்ந்து வரும் காலகட்டத்திலேயே அவரைக் கதாநாயகனாக வைத்து ‘கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு’ என்ற படத்தைத் தயாரித்தவர் கமல்ஹாசன்.

தற்போது நடிகர் விக்ரம் கதாநாயகனாக நடிக்க கடாரம் கொண்டான் என்ற திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறார். கமலின் மகள் அக்‌ஷராவும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.

விக்ரம் வித்தியாசமான தோற்றத்தில் அசத்தலான, கதாபாத்திரத்தில் சண்டைக் காட்சிகளில் தோன்றி நடித்திருக்கிறார். ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இந்தப் படம் பெயருக்கு ஏற்றாற்போல் மலேசியாவில் படமாக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

கமலிடம் உதவியாளராக இருந்த இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா, ஏற்கனவே கமலை வைத்து ‘தூங்காவனம்’ என்ற படத்தை எடுத்தவர். அவருக்கு இரண்டாவது வாய்ப்பாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் கமல்ஹாசன்.

கோலாலம்பூரின் தெருக்களில் கார்கள் ஒன்றை ஒன்று விரட்டும் காட்சிகளோடு படமாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் முன்னோட்டம் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.

அந்தப் படத்தின் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்: