Home இந்தியா தமிழகத்தில் முதல் முறையாக கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு!

தமிழகத்தில் முதல் முறையாக கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு!

1516
0
SHARE
Ad

சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு (Education TV Channel) சேவை தொடங்கப்பட உள்ளது என தமிழக பள்ளிக்கல்வித் துறை தனது முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதன் ஒளிபரப்பு அதிகாரப்பூர்வமாக வருகிற ஜனவரி 21-ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவித்திருக்கிறது.

மாணவர்களுக்கு அறநெறி குறித்த வகுப்புகள், சாலை போக்குவரத்து விதிகள், விளையாட்டு பயிற்சி, தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்து திறமைகளை வளர்க்கும் வகையில் இந்தத் தொலைக்காட்சி ஒளிபரப்பு அமையும் என அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பள்ளிகளின் பராமரிப்பு, சிறந்த உள்கட்டமைப்பு உள்ள பள்ளிகள், அரசு பள்ளிகளில் சிறந்த முறையில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், மாணவர்களை கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இந்தக் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பினை, தமிழக அரசின் கம்பி வட (கேபிள்) டி.வி.யின் 200-ஆம் அலைவரிசையில் காணலாம்.