Home நாடு தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்து சேவைகள்!

தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்து சேவைகள்!

1529
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஜனவரி 20 மற்றும் 21-ஆம் தேதிகளில் தைப்பூசத்தை முன்னிட்டு, பத்து மலை கோயிலுக்குச் செல்ல இருக்கும் பக்தர்களுக்கு, ரேப்பிட் பேருந்து நிறுவனம் பிரத்தியேகமாக இரண்டு பேருந்துகளை தயார் செய்துள்ளது என பிரசரானா மலேசியா பெர்ஹாட் (Prasarana Malaysia Berhad) இன்று அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்தது.

சென்ட்ரல் மார்க்கெட் பேருந்து நிலையத்திலிருந்து 18 பேருந்துகள் ஜாலான் ஈப்போ மற்றும் ஜாலான் கூச்சிங் சாலை வாயிலாக 10 மற்றும் 15 நிமிட இடைவெளியில் சேவையில் இருக்கும் அதே நேரத்தில், பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட இவ்விரண்டு பேருந்துகளும், கோம்பாக் எல்ஆர்டி நிலையத்திலிருந்து பத்து மலைக்கு 30-லிருந்து 45  நிமிட இடைவெளியில் செயல்படும் என அந்நிறுவனம் தெரிவித்தது.

அதிகாலை 5 மணியளவில் இச்சேவைத் தொடங்கப்பட்டு, நள்ளிரவு வரையிலும் நீடிக்கும்.

#TamilSchoolmychoice

கோம்பாக் எல்ஆர்டி நிலையத்திலிருந்து சேவையை பயன்படுத்துவோருக்கு 2 ரிங்கிட் கட்டணமும், சென்ட்ரல் மார்க்கெட் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு வழியாகப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு 3 ரிங்கிட் கட்டணமும் விதிக்கப்படும்.