Home நாடு 1எம்டிபி: கடமையைத் தவறவிட்ட கோல்ட்மேன் சாச்ஸ் பொறுப்பேற்க வேண்டும்!- நஜிப்

1எம்டிபி: கடமையைத் தவறவிட்ட கோல்ட்மேன் சாச்ஸ் பொறுப்பேற்க வேண்டும்!- நஜிப்

704
0
SHARE
Ad

கேமரன் மலை: 1எம்டிபி நிதி குறித்த நலனைப் பாதுகாப்பதில் தோல்வியுற்ற கோல்ட்மேன் சாச்ஸ் வங்கி, பொறுப்பினை ஏற்க வேண்டும் என முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார்.

நாம் ஓர் அமைப்பை தோற்றுவித்துள்ளோம் என்றால், அவ்வமைப்பு நமது நலன்களை பாதுகாக்க வேண்டும். அப்படி ஒரு வேளை, அது நமது நலன்களைப் பாதுகாக்கத் தவறினால், முழு பொறுப்பினையும் அவ்வமைப்பு ஏற்க வேண்டும், காரணம் அதற்காகத்தான் நாம் அவர்களை நியமித்து, சம்பளம் கொடுத்து வந்தோம்” என நஜிப் கூறினார்.

இதற்கிடையே, 1எம்டிபி நிதி மோசடியில், முன்னாள் கோல்ட்மேன் சாச்ஸ் வங்கி அதிகாரி டிம் லெய்ஸ்னர் சம்பந்தப்பட்டிருப்பதால்,அதன் தலைமை நிருவாக அதிகாரி டேவிட் சாலமன் மலேசியர்களிடம் மன்னிப்புக் கோரியிருந்தார்.

#TamilSchoolmychoice

இது குறித்து மேலும் கூறுகையில், முந்தைய மலேசிய அரசாங்கத்தின் உயர் பதவியில் இருந்த அதிகாரிகள் உட்பட, மலேசியர்கள் பல நபர்களால் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்றார்.

2009 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளுக்கு இடையே, 1எம்டிபியின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகள், 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை தவறாகப் பயன்படுத்தியுள்ளார்கள் என்று அமெரிக்க நீதிமன்றம் கூறியிருந்தது.