Home உலகம் தெரெசா மே-க்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வி!

தெரெசா மே-க்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வி!

836
0
SHARE
Ad

இங்கிலாந்து: பிரிட்டன் பிரதமர் தெரெசா மேக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வியில் முடிவுற்றது. பிரெக்சிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதா, இல்லையா என்ற பொதுமக்களின் கருத்துகளை கண்டறியும் வாக்கெடுப்பு கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்றது.

அவ்வாக்கெடுப்பில், ஐரோபிய ஒன்றியத்திலிருந்து விலக விருப்பம் தெரிவித்து 52 விழுக்காடு மக்களும், அதில் நீடித்திருக்க வேண்டி 48 விழுக்காடு மக்களும் விருப்பம் தெரிவித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, டேவிட் கேமரூன் தமது பிரதமர் பதவியிலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாகப் பிரதமரான  தெரெசா மே, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற முடிவுச் செய்து அதற்கானத் திட்டத்தை முன்வைத்தார்.

#TamilSchoolmychoice

வருகிற மார்ச் மாதம் 29-ஆம் தேதி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து, பிரிட்டன் வெளியேற இருக்கும் வேளையில், பிரிட்டன் நாடாளுமன்ற சபையில் பிரெக்சிட் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. பிரெக்சிட் மசோதாவுக்கு ஆதரவாக 202 வாக்குகள் கிடைத்த நிலையில் அந்த மசோதாவை எதிர்த்து 432 வாக்குகள் விழுந்தனஇதனால், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது கேள்விக்குறியாகியுள்ளது.

தெரெசா மேயின் மசோதா சந்தித்த தோல்வியைத் தொடர்ந்து அவரது அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவரும் தொழிலாளர் கட்சியின் தலைவருமான ஜெரெமி கோர்பின் முன்மொழிந்திருந்தார்இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டால் அதன் காரணமாக தெரெசா மேயின் நடப்பு அரசாங்கம் கவிழலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வந்தது.

இந்நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பும் விவாதமும் அந்நாட்டு நாடளுமன்றத்தில் நடைபெற்றது. அதில், தீர்மானத்திற்கு ஆதரவாக 306 பேரும், எதிராக 325 பேரும் வாக்களித்தனர். தீர்மானம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிரிட்டன் பிரதமராக தெரெசா மே மீண்டும் தொடர்கிறார்.