Home Video ஜிப்ஸி: ‘வெரி வெரி பேடு’ என விளக்கம் கூறும் சந்தோஷ் நாராயணன்!

ஜிப்ஸி: ‘வெரி வெரி பேடு’ என விளக்கம் கூறும் சந்தோஷ் நாராயணன்!

1178
0
SHARE
Ad

சென்னை: இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஜிப்ஸி’. இவரது இயக்கத்தில் வெளியான முந்தைய படங்களான குக்கூ மற்றும் ஜோக்கர் படங்கள் நல்ல கதையம்சத்தைக் கொண்டு நகர்த்தப்பட்டிருந்த வேளையில், இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. தற்போது, அவர் ‘ஜிப்ஸி’ படத்தினை இயக்கி வருகிறார். சிறப்பான கதையம்சத்தை மையப்படுத்தி இத்திரைப்படம் வெளிவரும் என நம்பப்படுகிறது.

இப்படத்தில் நடிகர் ஜீவா நடித்து வருகிறார். சமீபக் காலமாக ஜீவாவின் நடிப்பில் வெளிவந்த படங்கள் தனித்து நிற்கும் படியாக இல்லாததால், அவரது நடிப்பில் வெளியாகும் படங்களும் குறைய ஆரம்பித்தன. ‘ஜிப்ஸி’ திரைப்படம் மூலமாக மீண்டும் ஜீவாவின் பட வாய்ப்புகள் மிளிரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இதற்கிடையே, ஜிப்ஸி படத்தின் ‘வெரி வெரி பேடு’ எனும் பாடல் முன்னோட்டக் காணொளி வெளியாகியுள்ளது. இந்தப் பாடல் காணொளியில் சந்தோஷ் நாராயணனை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைப்பது போன்றும், அதற்கான காரணத்தை இதர சிறைவாசிகள் கேட்பதற்கு சந்தோஷ் நாராயணன் பதிலளிப்பது போன்றும் காட்சியமைக்கப்பட்டிருக்கிறது.    

#TamilSchoolmychoice

இத்திரைப்படத்தில் நடிகர் ஜீவா, நடாஷா சிங்மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வெரி வெரி பேடு (Very Very Bad) பாடல் முன்னோட்டக் காணொளியைக் கீழே உள்ள இணைப்பில் காணலாம்.