கடந்த ஜனவரி 12-ஆம் தேதி, தானா ராத்தாவில், வேட்புமனு தாக்கலின் போது, நம்பிக்கைக் கூட்டணி சார்பாக ஒரு பெண்மணி பூர்வக்குடியினருக்கு பணம் கொடுக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது, இம்மாற்றத்திற்குக் காரணமாக இருக்கலாம் என அவர் கூறினார்.
சுமார் 60 பூர்வக்குடியினருக்கு போக்குவரத்து செலவிற்காக அப்பபணம் கொடுக்கப்பட்டதாக பின்பு கூறப்பட்டது.
இம்மாதிரியான சூழல் தேர்தல் காலத்தின் போது நடப்பது நல்லது எனவும், பொதுமக்களின் பார்வைகள் வேட்பாளர்கள், மற்றும் கட்சிகள் மீது எப்போதும் இருந்துக் கொண்டிருக்கும் எனும் அச்சம் போட்டியிடுபவர்களின் எண்ணத்தில் இருப்பது முக்கியம் எனவும் அவர் கூறினார்.