Home இந்தியா பாராளுமன்ற தேர்தலில் 12 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவோம்- நடிகர் கார்த்திக் பேட்டி

பாராளுமன்ற தேர்தலில் 12 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவோம்- நடிகர் கார்த்திக் பேட்டி

604
0
SHARE
Ad

kartikமதுரை, ஏப். 2- அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி நிறுவனர் நடிகர் கார்த்திக் நேற்று மதுரையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவை சுற்றி பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. சீனாவுக்கு பயந்து இந்தியா தனது வெளியுறவு கொள்கையை மாற்றிக் கொள்ளக்கூடாது.

#TamilSchoolmychoice

மத்திய அரசு தமிழர்களின் உணர்வை மதித்து செயல்பட வேண்டும். மன உறுதி, தைரியம் இல்லாவிட்டால் அரசியலில் இருக்கக் கூடாது.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக எங்களது கட்சியின் சார்பில் விரைவில் மாபெரும் போராட்டம் நடத்த உள்ளோம். இஸ்ரேல் செய்வது சரி என்பதால் அதை ஆதரிக்கிறோம் என்று ரஷிய அதிபர் கூறிய கருத்தே இந்த போராட்டத்துக்கும் பொருந்தும்.

கூடங்குளம் அணு உலையை திறந்தால் மட்டுமே தமிழகத்தில் மின்தடை நீங்கும் என்பது பொய்யானது. அந்த பகுதி மக்களின் உணர்வுகளை அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும். கூடங்குளம் பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்த பிறகே அணு உலையை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

வரும் பாராளுமன்ற தேர்தலில் 12 தொகுதிகளில் எங்கள் கட்சி தனித்து போட்டியிடும். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க விலகியதாக அறிவித்த முடிவை பொறுத்தமட்டில், கலைஞர் எதையும் ஆராயாமல் செய்ய மாட்டார்.

இவ்வாறு நடிகர் கார்த்திக் கூறினார்.