Home நாடு சுல்கிப்ளி நோர்டின் இந்திய சமூகத்தினரிடம் மன்னிப்பு!

சுல்கிப்ளி நோர்டின் இந்திய சமூகத்தினரிடம் மன்னிப்பு!

597
0
SHARE
Ad

Zulkifli Noordinகெடா, ஏப்ரல் 2 – கூலிம்-பண்டார் பாரு நாடாளுமன்ற உறுப்பினரான சுல்கிப்ளி நோர்டின், இந்து சமூகத்தை இழிவு படுத்தும் படியான தனது பேச்சுக்காக, இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக அறிவித்துள்ளார். மேலும் தான் 10 வருடங்களுக்கு முன் பேசிய அந்த ஒளிநாடாவை தற்போது எதிர்கட்சிகள் வெளியிட்டு நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து சுல்கிப்ளி கூறுகையில், இந்து சமூகத்தை இழிவு படுத்தும் படியான தனது பேச்சு தான் முன்பு பாஸ் கட்சியின் உறுப்பினராக இருந்த போது பதிவு செய்யப்பட்டது என்றும், தான் பேசிய அந்த பேச்சு குறித்து மிகவும் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தான் பல வருடங்களுக்கு முன்பு பேசியதை, எதிர்கட்சிகள் தற்போது தேர்தல் சமயத்தில் பயன்படுத்தி தனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்றும் சுல்கிப்ளி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அத்துடன், அன்வார் இப்ராகிமின் முதலாவது ஓரினப்புணர்ச்சி வழக்கில், தான் அவரது வழக்கறிஞராக செயல்பட்டதாகவும், சுல்கிப்ளி நேற்று கெடா மாநிலத்தில் நடந்த கூட்டமொன்றில் கலந்துகொள்ள வந்த போது செய்தியாளர்களிடம் கூறினார்.

சுல்கிப்ளி தற்போது அம்னோ சார்ந்த மலாய் உரிமைக்குப் போராடும் அமைப்பான பெர்காசாவின் துணைத் தலைவராக செயல்பட்டுவருகிறார்.

ஆனால் கடந்த 2008 ஆம் ஆண்டுத் தேர்தலில், சுல்கிப்ளி பி.கே.ஆர் சார்பாக கூலிம்-பண்டார் பாரு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு, தேசிய முன்னணியைச் சேர்ந்த வேட்பாளரான அப்துல் அஜீஸ் ஷேயிக் பாட்சீரை 5,583 வாக்குகள் பெரும்பான்மையில்  தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.