Home நாடு ஊழல் தடுப்பு ஆணையம் சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்தது

ஊழல் தடுப்பு ஆணையம் சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்தது

963
0
SHARE
Ad

கோலதிரெங்கானு – கடந்த ஆண்டு மே மாதத்தில் பொய்யான தகவல்களின் அடிப்படையில் அரசாங்கத்திடமிருந்து 5 இலட்சம் ரிங்கிட்டுக்கு செலவினங்களை பெற்றார் என்பதற்காக திரெங்கானு மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்திருக்கிறது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில்  வாக்குமூலம் வழங்க கோலதிரெங்கானுவில் உள்ள மாநில ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வந்தபோது அந்த சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினர் கைது செய்யப்பட்டார்.

தனது தொகுதியில் 32 நிகழ்ச்சிகளை நடத்தியதாகக் கூறி, வட்டார நில அலுவலகம் மற்றும் ஊராட்சி மன்றத்திடமிருந்து நிதி கோரிக்கை மனுவைச் சமர்ப்பித்து அந்த சட்டமன்ற உறுப்பினர் பணத்தைப் பெற்றார் என நம்பப்படுகிறது. ஆனால் அந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை.

#TamilSchoolmychoice

இன்று திங்கட்கிழமை கோலதிரெங்கானு அமர்வு நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அந்த சட்டமன்ற உறுப்பினரின் தடுப்புக் காவலை நீட்டிக்கும் விண்ணப்பத்தை ஊழல் தடுப்பு ஆணையம் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.