நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 20) பினாங்கு தைப்பூச ஏற்பாடுகளை நேரடியாக வருகை தந்து பார்வையிட்ட சௌ, சுமார் இரண்டு மணி நேரம் அங்கு செலவிட்டார். தண்ணீர்மலை முருகன் ஆலயத்திற்கு இரதம் செல்லும் வழியில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர்ப் பந்தல்களைப் பார்வையிட்ட முதல்வர் சௌ, ஜாலான் மெக்காலிஸ்டர் சாலையில் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் அமைத்திருந்த தண்ணீர்ப் பந்தலையும் பார்வையிட்டார்.
பினாங்கு மாநிலத்திலுள்ள இந்து சமூகத்தினருக்கு வழங்கி வரும் உதவிகள் குறித்தும் விவரித்த சௌ, 50 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய ஜாலான் மகாலிஸ்டரிலுள்ள கட்டடம், இந்து அறப்பணி வாரியத்தின் தலைமையகமாக 2010 முதல் செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு பினாங்கு மாநில அரசாங்கம் வழங்கி வந்த 1.1 மில்லியன் மானியம் கடந்த ஆண்டு 1.5 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.