Home உலகம் “டாயிஸ் தீவிரவாதக் குழுவை விழ்த்திவிட்டோம்!”- அமெரிக்க வெளியுறவு அமைச்சர்

“டாயிஸ் தீவிரவாதக் குழுவை விழ்த்திவிட்டோம்!”- அமெரிக்க வெளியுறவு அமைச்சர்

694
0
SHARE
Ad

வாஷிங்டன்: கடந்த வாரங்களில் அமெரிக்க இராணுவத்தின் மீது தாக்குதலை மேற்கொண்ட, “கலிபா” டாயிஸ் எனும் தீவிரவாதக் குழுவை வீழ்த்திவிட்டதாக, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோ நேற்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தார்.

மேலும், சிரியா மற்றும் ஈராக்கில் செயல்பட்டு வரும் கலிபா ஐசிஸ்சையும் வீழ்த்தி விட்டதாக அவர் அறிவித்தார்.

கடந்த வாரம், மான்பிஜ் நகரில் மேற்கொள்ளப்பட்டத் தற்கொலைத் தாக்குதலில், நால்வர் உயிர் இழந்தனர். அவர்களின் இரு அமெரிக்க இராணுவ வீரர்களும் அடங்குவர்.

#TamilSchoolmychoice

இதற்கிடையே, கடந்த திங்களன்று, அந்த பயங்கரவாதக் குழு மீண்டும் அமெரிக்க கார் ஒன்றின் மீது குண்டு வீசி தாக்குதலை மேற்கொண்டதாக ஒப்புக்கொண்டது.

கடந்த டிசம்பர் மாதம், சிரியாவிலிருந்து தனது படைகளை அமெரிக்கா திரும்பப் பெற்றுக் கொள்ளும் என அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் அறிவித்த பின்பு, இவ்விரண்டு தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டன.