Home உலகம் மீண்டும் பனியில் உறைந்தது, நயாகாரா!

மீண்டும் பனியில் உறைந்தது, நயாகாரா!

929
0
SHARE
Ad

தொரொந்தோ: கிறிஸ்துஸ் தினத்திற்குப் பிறகு தொடர்ச்சியாக, அமெரிக்கா மற்றும் கனடாவில் பொதுவாகவே வருட ஆரம்பத்தில் குளிர்காலம் நிலவியிருக்கும். இம்முறையும் குளிர் சூழ்ந்துள்ள நிலையில், நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதி பனியில் உறைந்துள்ளது.

இதனை கண்டு இரசிப்பதற்கு மக்கள், பனியால் சூழப்பட்டிருக்கும் நயாகரா நீர்வீழ்ச்சியின் படங்களை தங்களது முகநூல், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இம்முறை, தொரொந்தோவில், குளிர் அளவு – 24 பாகை செல்சியஸ் அளவு பதிவிடப்பட்டிருப்பதாகவும், இரவில் ஏற்படும் குளிர் காற்றினால் அதன் அளவு மேலும் குறைந்து – 38 பாகை செல்சியஸ் வரையிலும் செல்லும் எனக் கூறப்படுகிறது.