Home நாடு “தெங்கு லக்சாமானா ஜோகூர்” புற்றுநோய் அறக்கட்டளைக்கு 5,000 ரிங்கிட் நன்கொடை!

“தெங்கு லக்சாமானா ஜோகூர்” புற்றுநோய் அறக்கட்டளைக்கு 5,000 ரிங்கிட் நன்கொடை!

2046
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: ஜோகூர் மக்களிடையே ஒற்றுமையையும், அமைதியையும் எப்போதும்வலியுறுத்தி வரும் ஜோகூர் சுல்தான், கடந்த ஜனவரி 21-ஆம் தேதி (திங்கட்கிழமை) தைப்பூசத் திருநாளை ஒட்டி ஜோகூர் பாரு அருள்மிகு தண்டாயுதபாணி கோயிலுக்கு வருகை புரிந்திருந்தார்.

தைப்பூசம் அன்று மதியம் 12 மணிக்கு வருகைப் புரிந்த சுல்தானுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வரவேற்பு வழங்கினர். மாநில மந்திரி பெசார் டத்தோ ஒஸ்மான் சாபியான், பயனீட்டாளர், மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்  டாக்டர் எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் கோயில் தலைவர் டாக்டர் சி. பத்துமலை ஆகியோரும் அவருடன் வருகைத் தந்திருந்தனர்.

இந்த விழாவின் போது , துங்கு லக்சாமானா ஜோகூர் புற்றுநோய் அறக்கட்டளைக்கு, 5,000 ரிங்கிட் நன்கொடையை கோயில் நிருவாகம் வழங்கியது.