சுங்கைப்பட்டாணி – மலேசியாவில் தைப்பூசம் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஆலயங்களுள் ஒன்று சுங்கைப்பட்டாணி ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம். இந்த ஆண்டும், இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள சிறப்புறக் கொண்டாடப்பட்ட சுங்கைப்பட்டாணி தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொண்ட கெடா மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும், புக்கிட் செலம்பாவ் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.சண்முகம் தைப்பூசத் திருவிழா கொண்டாட்டத்திற்காக மாநில அரசாங்கம் 60 ஆயிரம் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளதாக அறிவித்தார்.
தைப்பூசத்தன்று இரவு சுங்கைப்பட்டாணி ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு வருகை தந்த பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி ஆலயம் வழங்கிய வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் கீழ் இந்திய சமுதாயம் மேலும் பல நன்மைகளைப் பெறும், மேம்பாடு காணும் என்று கூறிய வேதமூர்த்தி, அரசாங்கம் ஒதுக்கியிருக்கும் 100 மில்லியன் ரிங்கிட் முறையாக நிர்வகிக்கப்பட்டு, விநியோகிக்கப்படும் என உறுதியளித்தார்.
இந்த முறை சுங்கைப்பட்டாணி தைப்பூசத் திருவிழாவில் வண்ணமயமான பல காவடிகள் அணிவகுத்து வந்ததாகப் பார்வையாளர்கள் தெரிவித்தனர். சுங்கைப்பட்டாணி தைப்பூசத்திற்கு வருகை புரிந்த செல்லியல் ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவர்கள் எடுத்த அந்தக் காவடிகளின் சிலவற்றின் காட்சிகளை இங்கே காணலாம்: