Home நாடு கேமரன் மலை: விவாத மேடை சூடு பிடிக்கவில்லை!

கேமரன் மலை: விவாத மேடை சூடு பிடிக்கவில்லை!

983
0
SHARE
Ad

கேமரன் மலை: மலேசிய வரலாற்றில் முதல் முறையாக, தேர்தலில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களுக்கு இடையிலான நேரடி விவாத மேடை நேற்று (புதன்கிழமை) கேமரன் மலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆயினும், அந்த நிகழ்ச்சிக்கு எதிர்பார்த்த அளவிற்கு உள்ளூர் மக்களிடம் இருந்து ஆதரவு கிடைவில்லை என பெர்னாமா செய்தி நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.

பல இடங்கள் காலியாக இருந்த போதிலும், சுயேச்சை வேட்பாளர் வோங் செங் ஈ, நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் எம். மனோகரன், மற்றும் மேலும் ஒரு சுயேச்சை வேட்பாளரான சலேஹுடின் அப்துல் தாலிப் இந்த விவாத மேடையில் பங்குப் பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் தேசிய முன்னணி வேட்பாளரான ரம்லி முகமட் பங்கேற்கவில்லை. 

இந்த நிகழ்ச்சியை பெர்செ 2.0 உடன் இணைந்து, இக்மாஸ் நிறுவனமும், மலேசிய தேசியப் பல்கலைக்கழகமும் ஏற்பாடு செய்திருந்தனர்.

#TamilSchoolmychoice

இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, அதே நேரத்தில், அருகிலுள்ள மற்ற இடங்களில் இதே மாதிரியான இரண்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், ஒரு வேளை மக்கள் அங்கு சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

வேட்பாளர்கள் கலந்து கொள்ளும் இத்தகைய இடைத்தேர்தல் விவாத மேடை நிகழ்ச்சி இதுவே முதன் முறையாகும்.

ஆஸ்ட்ரோ அவானி தொலைக்காட்சி இந்த விவாத மேடையை நேரலையாக ஒளிபரப்பியது.