Home நாடு பள்ளிகளில் 30 நிமிடம் வரையிலும் ஓய்வு நேரத்தை அதிகரிக்கலாம்!

பள்ளிகளில் 30 நிமிடம் வரையிலும் ஓய்வு நேரத்தை அதிகரிக்கலாம்!

944
0
SHARE
Ad

சுபாங் ஜெயா: பள்ளிகளில் ஓய்வு நேரத்தை 20 நிமிடங்களிலிருந்து 30 நிமிடங்களுக்கு அதிகரிக்க பள்ளிகளுக்கு உரிமைகள் உள்ளன என துணைக் கல்வி அமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.

சிலாங்கூரிலுள்ள சுபாங் சீனப் பள்ளிக்கு வருகை தந்தபோது, அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் 20 நிமிட ஓய்வு நேரமானது போதாது எனவும், சில நேரங்களில் மாணவர்கள் நின்றுக் கொண்டே சாப்பிடுவதாகவும், நேரமின்மைக் காரணமாக உணவை வீசி விடுவதாகவும் அமைச்சரிடம் புகார் செய்ததாக சின் சியூ சீன நாளிதழ் குறிப்பிட்டது.

இது குறித்துப் பேசிய தியோ, பள்ளிகளில் 20 நிமிடத்திலிருந்து, 30 நிமிடங்கள் வரையிலும் ஓய்வு நேரங்கள் அனுமதிக்கப்படலாம் எனவும், இவ்வாறு கல்வி அமைச்சின் கொள்கையிலும் இடம்பெற்றுள்ளது எனவும் அவர் கூறினார்.