Home நாடு 1எம்டிபிக்கு சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் சோதனை!

1எம்டிபிக்கு சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் சோதனை!

750
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 1எம்டிபி ஊழல் விவகாரத்தில், கோல்ட்மேன் சாச்ஸ் வங்கியுடன் சம்பந்தம் உள்ளதாக நம்பப்படும், ராஹ்மட் கிம் பார்ட்னர்ஸ் வழக்கறிஞர் அலுவலகம், இன்று காலை (வியாழக்கிழமை)சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

புக்கிட் அமான் வணிகக் குற்றவியல் புலனாய்வுத் துறை அதிகாரிகள், காலையிலிருந்து அலுவலகத்தில் சோதனைகளை மேற்கொண்டு வந்ததாகவும், மதியம் 1:30 வரை அவர்கள் ஆவணங்களைக் கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததை தி ஸ்டார் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

#TamilSchoolmychoice

நீதிமன்ற உத்தரவுக்குப் பின்பே இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.