Home நாடு நாட்டின் 16-வது மாமன்னராக சுல்தான் அப்துல்லா!

நாட்டின் 16-வது மாமன்னராக சுல்தான் அப்துல்லா!

1067
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவின் புதிய மாமன்னரைத் தேர்ந்தெடுப்பதற்காக மலாய் ஆட்சியாளர்களின் சந்திப்புக் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) தலைநகரில் நடைப்பெற்றது. அச்சந்திப்புக் கூட்டத்திற்கு திரெங்கானு ஆட்சியாளர், சுல்தான் மீசான் சாய்னால் தலைமையேற்றார்.

இச்சந்திப்பு, காலை 11:15 மணியளவில் தொடங்கி, மதியம் 12:45 மணியளவில் முடிவடைந்தது. இச்சந்திப்பில் கிளந்தான் மாநில ஆட்சியாளரைத் தவிர்த்து இதர மலாய் ஆட்சியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

இந்த வாக்கெடுப்பு சந்திப்புக் கூட்டத்தில், நாட்டின் 16-வது மாமன்னராக, அண்மையில் முடிசூட்டப்பட்ட பகாங் சுல்தானான, சுல்தான் அப்துல்லா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே, பேராக் ஆட்சியாளர் சுல்தான் நஸ்ரின் ஷா துணை மாமன்னராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த ஜனவரி 6-ஆம் தேதி, நாட்டின் 15-வது மாமன்னர் சுல்தான் முகமட் பதவியிலிருந்து விலகியதன் காரணமாக புதிய மாமன்னர் மற்றும் துணை மாமன்னருக்கானத் தேர்வு நடைப்பெற்றது.