Home நாடு கேமரன் மலை: வாக்குப் பதிவு இடத்திலிருந்து மனோகரன் வெளியேற்றப்பட்டார்!

கேமரன் மலை: வாக்குப் பதிவு இடத்திலிருந்து மனோகரன் வெளியேற்றப்பட்டார்!

719
0
SHARE
Ad

கேமரன் மலை: நம்பிக்கைக் கூட்டணி கட்சியின் சின்னம் கொண்டிருந்த ஆடையை அணிந்திருந்ததற்காக, அக்கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியிடும், எம். மனோகரன் வாக்குப் பதிவு நடக்கும் இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

வாக்குப்பதிவு நடந்துக் கொண்டிருக்கையில், கட்சியின் சின்னத்தைப் பிரதிபலிக்கும் எந்தவொரு செயலும், தேர்தல் ஆணையச் சட்டத்திற்கு எதிரானது என தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் கூறினார்.   

வாக்குப்பதிவு நடக்கும் இடத்திலிருந்து 50 மீட்டர் தூரத்திற்கு உட்பட்ட இடத்தில், கட்சியின் சின்னம் மற்றும் பிரச்சாரங்களை மேற்கொள்ள, சட்டம் அனுமதிக்காது என அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

இக்குற்றத்தை மனோகரன் செய்ததாக , அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ டாக்டர் வஜ்டி டுசூகி தனது முகநூல் பக்கத்தில், இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு சுட்டிக்காட்டினார்.