சம்பவம் நடந்த அன்று, ஹிடால்கோ மாநிலத்தில் குழாயில் கசிந்து வெளியேறிய பெட்ரோலை, 600-கும் மேற்பட்ட பொதுமக்கள் வாளிகள் மற்றும் பாத்திரங்களில் பிடித்துக் கொண்டிருந்தனர் என்றும், எதிர்பாராத விதமாக திடீரென எரிபொருள் குழாய் வெடித்து தீப்பிடித்ததில் ஏராளமானோர் கருகி மாண்டனர் எனவும், மாநில அரசு தெரிவித்தது.
மெக்சிகோவில், மெக்சிகோ சிட்டி உள்ளிட்ட நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அங்கு மக்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று எரிபொருளை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன், காரணமாக, பெட்ரோல் திருட்டு இங்கு அதிக அளவில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இறந்தவர்களின் அடையாளத்தைக் கண்டறிவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதால், மெக்சிகோ அரசாங்கம், அனைத்துலக நிபுணர்களின் உதவியைப் பெறும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக மெக்சிக்கோ அரசு தெரிவித்தது.