Home வணிகம்/தொழில் நுட்பம் பேஸ்புக்: இன்ஸ்டாகிராம், வாட்சாப், மெஸ்செஞ்ஜேர், ஒருங்கிணைக்க திட்டம்!

பேஸ்புக்: இன்ஸ்டாகிராம், வாட்சாப், மெஸ்செஞ்ஜேர், ஒருங்கிணைக்க திட்டம்!

1334
0
SHARE
Ad

அமெரிக்கா: இன்ஸ்டாகிராம், வாட்சாப் மற்றும் மெஸ்செஞ்ஜேர் ஆகிய மூன்று தகவல் சேவைகளை ஒருங்கிணைக்க பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக நியு யார்க் டைம்ஸ் தெரிவித்தது. தற்போது, இம்மூன்றும், தனித்திருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கையில், இந்த இணைப்பின் மூலம், வெவ்வேறு சேவைகளுக்கு, தகவல்களை ஒரே அமைப்பின் வழி அனுப்ப முடியும் என அது குறிப்பிட்டுள்ளது.

ஆயினும், இத்திட்டமானது நீண்ட கால அடிப்படையில் ஆராய்ந்து செயல்படுத்தப்படும் என பேஸ்புக் பிபிசி நிறுவனத்திடம் கூறியது. இத்திட்டம், பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கின் மேற்பார்வையின் கீழ் செயல்படுத்தப்படும் எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டது.

#TamilSchoolmychoice

இந்த அமைப்பு முறை முடிவுக்கு வந்ததும், பேஸ்புக் பயனர் ஒருவர், வாட்சாப் கணக்கு வைத்திருக்கும் ஒருவருடன்  நேரடியாக தொடர்புக் கொள்ள இயலும். அடிப்படையில் இந்த பயன்பாடுகளுக்கு பொதுவான “மையம்” (core) இல்லாததால், தற்போது அவ்வாறு செய்வதற்கு சாத்தியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மூன்று பயன்பாடுகளையும் இணைக்கும் வேலைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டதாகவும், 2019-ஆம் ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.