Home உலகம் பிரேசில்: அணை உடைந்து 7 பேர் கொல்லப்பட்டனர், 150 பேரைக் காணவில்லை!

பிரேசில்: அணை உடைந்து 7 பேர் கொல்லப்பட்டனர், 150 பேரைக் காணவில்லை!

1749
0
SHARE
Ad

பிரேசில்: பிரேசிலின் தென்கிழக்கு மாநிலமான மினஸ் ஜெராஸ் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) மதியம் கூலக்கழிபொருள் அணை (tailings dam) இடிந்து விழுந்ததில் குறைந்தபட்சம் 50 பேர் கொல்லப்பட்டனர் என கார்டியன்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த சம்பவத்தில் 150 பேர் காணாமல் போனதாக மாநில அரசாங்கம் தெரியப்படுத்தி வரும் வேளையில், இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

#TamilSchoolmychoice

மண் சரிந்து விழுந்ததில், காயமடைந்த ஒன்பது பேர் உயிருடன் மீட்கப்பட்டனர், மற்றும் இச்சம்பவத்தில் சிக்கிய இதர 100 பேர்களும் மீட்கப்பட்டனர் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதே மாதிரியான சம்பவம்,  மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இப்பகுதியில் ஏற்பட்டு, 19 பேர் கொல்லப்பட்டனர். மேலும், நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணில் புதைந்தன.