கேமரன் மலை: கேமரன் மலை இடைத் தேர்தலில், மதியம் 1:00 மணி நிலவரம்படி 60 விழுக்காட்டினர் வாக்குகளைப் பதிவுச் செய்துவிட்டதாக தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் தெரிவித்தார்.
காலை 7:30 முதல், பிரிஞ்சாங் வாக்குப்பதிவு நிலையத்தில் மக்கள் காத்திருந்து வாக்களித்தனர் என அவர் கூறினார். இம்முறை, வாக்களிக்க வந்தோரின் எண்ணிக்கை மன நிறைவு அளிப்பதாக உள்ளது எனவும் அசார் குறிப்பிட்டார்.
தேசிய முன்னணி வேட்பாளர் ரம்லி முகமட் ,சுயேச்சை வேட்பாளர் வோங் செங் ஈ, நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் எம். மனோகரன், மற்றும் மேலும் ஒரு சுயேச்சை வேட்பாளரான சலேஹுடின் அப்துல் தாலிப் ஆகியோர் இம்முறை கேமரன் மலை இடைத் தேர்தலில் போட்டிடுகின்றனர்.
29 வாக்குச் சாவடிகள் இன்று காலை 8:00 மணியளவில் திறக்கப்பட்டன. இன்றிரவு 10:00 மணியளவில் வெற்றிப்பெற்றவரை அறிவிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.