Home உலகம் பிரேசில்: இரண்டாம் முறையாக அணை உடையும் அபாயம், 24,000 பேர் வெளியேற்றம்!

பிரேசில்: இரண்டாம் முறையாக அணை உடையும் அபாயம், 24,000 பேர் வெளியேற்றம்!

836
0
SHARE
Ad

பிரேசில்: பிரேசிலின் தென்கிழக்கு மாநிலமான மினஸ் ஜெராஸ் பகுதியில் கடந்த (வெள்ளிக்கிழமை) கூலக்கழிபொருள் அணை (tailings dam) இடிந்து விழுந்ததில் குறைந்தபட்சம் 58 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.  

இந்த சம்பவத்தில் 250 பேர் காணாமல் போனதாக மாநில அரசாங்கம் தெரியப்படுத்தி வரும் வேளையில், இவர்கள் இச்சம்பவத்தில் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, இந்த அணையானது மீண்டும் உடைந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் வாழும் சுமார் 24,000 மக்களை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை வெளியேற உத்தரவிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த சம்பவத்திற்கான தெளிவானக் காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை எனக் கூறப்படுகிறது. ஆயினும், இதற்கு முன்னதாக மேற்கொண்ட ஆய்வுகளின்படி அந்த அணைக்கு எந்தவொரு பிரச்சனையும் இருந்ததாகத் தெரியவில்லை என ஆய்வு நடத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதே மாதிரியான சம்பவம்,  மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இப்பகுதியில் ஏற்பட்டு, 19 பேர் கொல்லப்பட்டனர். மேலும், நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணில் புதைந்தன.