Home உலகம் பிரேசில் அதிபர் ஜாயிர் போல்சொனாரோ கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில்!

பிரேசில் அதிபர் ஜாயிர் போல்சொனாரோ கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில்!

712
0
SHARE
Ad

சாவ் பாலோ : பிரேசில் நாட்டு அதிபர் ஜயர் போல்சனாரோ கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த 10 நாட்களாக அவர் பல்வேறு உடல்நலக் கோளாறுகளை எதிர்நோக்கி வந்தார்.

அதைத் தொடர்ந்து 66 வயதான அவருக்கு அவசர சிகிச்சை மேற்கொள்ளப்பட இருக்கிறது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

பிரேசலின் சாவ் பாலோ நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் தற்போது பிரேசில் அதிபர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2018 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது அவர் கத்தியால் வயிற்றில் குத்தப்பட்டு படுகாயம் அடைந்தார். இருந்தாலும் உடனடி மருத்துவ சிகிச்சைகளை தொடர்ந்து அவர் குணமடைந்தார்.

கத்திக் குத்து காரணமாக அவர் மீது எழுந்த அனுதாப அலைகளினால் அவர் அந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலிலும் வெற்றி பெற்றார்.

கொவிட் தொற்றால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக பிரேசில் உருவெடுத்திருக்கிறது. இந்நிலையில் அதிபரின் மோசமான உடல் நிலையால் அந்நாட்டின் அரசியல் நிலைமை மேலும் மோசமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.