கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் மீது மேலும் மூன்று புதிய நிதி கையாடல் குற்றச்சாட்டுகள் இன்று (திங்கட்கிழமை) பதிவுச் செய்யப்பட்டன.
2014-ஆம் ஆண்டு, ஜூலை 8-ஆம் தேதி ஜாலான் ராஜா சுலானில் அமைந்துள்ள அம்இஸ்லாமிக் வங்கிக் கணக்கில் 47 மில்லியன் ரிங்கிட்டை ஊழலாகப் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில், இன்று பிற்பகலில், நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலிக்கு முன்னிலையில் நஜிப் மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டன.
இதற்கிடையே, முன்னாள் அம்னோ தலைவருமான அவர், வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் 10 மில்லியன் ரிங்கிட்டை ஊழலாகப் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்.