Home இந்தியா முன்னாள் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்

முன்னாள் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்

1325
0
SHARE
Ad

புதுடில்லி – கடந்த சில ஆண்டுகளாகத் தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தாலும், இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியத் தாக்கங்களை ஏற்படுத்திய ஜோர்ஜ் பெர்னாண்டஸ் இன்று செவ்வாய்க்கிழமை காலமானார்.

அல்சைமர் எனப்படும் நரம்பியல் பாதிப்பு நோயால் அவதியுற்று வந்த 88 வயதான ஜார்ஜ் பெர்னாண்டஸ், இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் கொண்டுவந்த எமர்ஜென்சி எனப்படும் அவசர காலச் சட்ட அமுலாக்கத்தின்போது அதை எதிர்த்துக் கடுமையாகப் போராடியவர் ஆவார்.

வாஜ்பாய் தலைமையிலான இந்திய அரசில், பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸின் நல்லுடல் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு பின்னர் மாலையில் நல்லடக்கம் நடைபெற்றது.