புத்ராஜெயா: பிப்ரவரி 1-ஆம் தேதி கூட்டரசுப் பிரதேச தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டிற்கான கூட்டரசுப் பிரதேச தினத்தின் கருப்பொருளாக “கூட்டரசு பிரதேசத்தை நாம் நேசிப்போம்” எனும் கருப்பொருள் தேர்தெடுக்கப்பட்டுள்ளது. இதனை மையமாகக் கொண்டு 21 நிகழ்ச்சிகள் இம்மாதம் முழுவதுமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இதன் அமைச்சர் காலிட் சமாட் தெரிவித்தார்.
கடந்து ஆண்டுகளைக் காட்டிலும், இம்முறை, இக்கொண்டாட்டத்திற்காக மொத்தம் 1.625 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டுகளின் ஒதுக்கீட்டை விட குறைவான ஒதுக்கீடு என்றாலும், மக்கள் தொடர்ந்து பங்குக் கொள்ளும் விருந்துபசரிப்பு நிகழ்ச்சிகள் கருத்தில் கொள்ளப்படும் என அவர் கூறினார்.
இவ்வாறான நிகழ்ச்சிகள் மூலம் மக்களை ஒற்றுமைப் படுத்தவும் உதவியாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.