ஜோர்ஜ் டவுன்: சீனப் பெருநாளை முன்னிட்டு, பினாங்கு கெக் லொக் சி கோயில் வண்ணமிகு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
10,000-கும் மேற்பட்ட பாரம்பரிய சீன விளக்குகள் (லேண்டர்ன்) மற்றும் ஆயிரக்கணக்கான நியோன் மற்றும் எல்இடி விளக்குகளால், தென்கிழக்காசியாவிலேயே மிக பெரிய பெளத்த கோயிலாக விளங்கும் இக்கோயில், ‘பன்றி’ ஆண்டை முன்னிட்டு இம்முறை அழகுமிகு விளக்குகளால் அமைக்கப்பட்டிருக்கிறது.
கெக் லோக் சி கோயில் அறங்காவலர், டத்தோ ஸ்டீவன் ஓய், கடந்த 30 ஆண்டுகளாக மாநில அரசாங்கம், அக்கோயிலுக்கு வழங்கி வரும் ஆதரவைக் குறிப்பிட்டுக் கூறினார். இவ்வேளையில் மாநில அரசாங்கத்திற்கு நன்றி கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இம்முறை, இந்த சீனப் புத்தாண்டை முன்னிட்டு இக்கோயிலுக்கு வருபவர்களுக்கு ஓர் அழகுமிக்கக் காட்சியைப் பரிசாக அளிப்பதற்கு இந்த அலங்கரிப்பு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.