Home நாடு விதிமுறைகளுக்கு உட்பட்டே பொகா சட்டம் அமல்படுத்தப்படுகிறது!- புசி ஹருண்

விதிமுறைகளுக்கு உட்பட்டே பொகா சட்டம் அமல்படுத்தப்படுகிறது!- புசி ஹருண்

951
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பொகா சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்படும் பொழுது, அது அந்நபர் புரிந்த தனிப்பட்ட குற்றத்தின் அடிப்படையில் அமைந்ததாக இருக்கும் என காவல் துறைத் தலைவர் டான்ஶ்ரீ முகமட் புசி ஹருண் கூறினார்.

குற்றவியல் தடுப்பு அமைப்பின் விதிகள் மற்றும் இதர சட்ட முடிவுகளின் படி, இந்த தடுப்புக் காவல் அமல்படுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். 

தற்போது, சிம்பாங் ரெங்காமில் அமைந்துள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில், பொகா சட்டத்தின் கீழ் ஒருவர் மட்டும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், 56 பேர்கள் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார். ஆயினும், விடுவிக்கப்பட்டவர்களின் மீது கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் எனவும் புசி குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, 1959-ஆம் ஆண்டு குற்றவியல் தடுப்புச் சட்டம் (பொகா), சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட, பதினெட்டு வயதிற்கும் கீழ்பட்ட இளையோர்களை விடுவிக்கக் கோரி மனித உரிமை சங்கம் (சுவாராம்) கேட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.