கோலாலம்பூர்: இணைய வசதிகள் மற்றும் அதிக அளவிலான உயர்தர அகண்ட அலைவரிசையைக் கொண்ட சேவையை மக்களுக்கு வழங்குவதற்காக அரசாங்கம் 1 பில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்துள்ளதாக பல்லூடக மற்றும் தகவல் தொடர்பு அமைச்சின் துணை அமைச்சர் எட்டின் ஷாஸ்லீ ஷித் கூறினார்.
முந்தைய அரசாங்கம் இச்சேவைத் தொடர்பாக 8 பில்லியன் ரிங்கிட்டை செலவழித்துள்ளதாகவும், தேவையான அளவுக்கு உள்கட்டமைப்பை வழங்குவதில், அது தோல்வி கண்டு விட்டதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக நியமிக்கப்பட்ட சேவை வழங்குனர்களும் இச்சேவையை சரியான முறையில் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை எனத் தெரிவித்தார்.
திருப்திகரமான இணைய வசதி கிடைக்காத பல பகுதிகள் இருக்கும் வேளையில், தற்போது, குறைவான வேகத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 4ஜி மற்றும் 5ஜி சேவையை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.