மாஸ்கோ – அமெரிக்காவுக்கும் இரஷியாவுக்கும் இடையிலான அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடைக்காலத்திற்கு இரத்து செய்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து, தாங்களும் அதே போன்ற முடிவை எடுப்பதாக இரஷிய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்தார்.
அமெரிக்காவின் முடிவுக்கு எதிர்வினையாக இந்த முடிவு எடுக்கப்படுவதாக புடின் தெரிவித்தார்.
1987-ஆம் ஆண்டில் இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டம் கையெழுத்தானது. இருநாடுகளுக்கும் இடையிலான இத்தகைய முதல் உடன்பாடு இதுவாகும்.
ஆயுதப் போட்டா போட்டியைத் தவிர்க்கும் ஒரு முயற்சியாக அமெரிக்காவும் இரஷியாவும் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டன.
தற்போது இரு நாடுகளுமே இந்த உடன்பாட்டின் அமுலாக்கத்தைத் தற்காலிகமா நிறுத்தியுள்ளன.